அம்மம்மா
பாரதியின் புதுமைப் பெண்ணை நான் கண்டதில்லை
அதற்கு நிகர் என்று கேட்டால் உங்களைக் கூறலாம், அம்மம்மா
கையொன்றினால் கஷ்டம் என்றாலும் பொருட்படுத்தாது
பத்தும் பெற்றுப் பெறாத பேரப்பிள்ளைகளையும் சேர்த்து
வளர்த்து வஞ்சனை வைக்காமல் சோறு ஊட்டி ஆராட்டிய
உன்னை வழி அனுப்பி வைக்க கூட எனக்கு முடியவில்லை
வழி அனுப்ப முடியாத வலியை வார்த்தை வழியாகக் கரைக்க நினைக்கிறேன்
கழுத்துவரை சாப்பிட்ட பின்னும் இடியப்பமும் வாழைப்பழமும்
சேர்த்து சர்க்கரையோடு கொடுப்பாயே அதை நினைத்து பார்க்கிறேன்
கோடை காலத்திலே கொளுத்தும் வெய்யிலிலே கீரை பறிக்க
பொடி நடையாய் செல்வாயே; உனக்கு பின்னால் நாங்களும் வருவோமே
அந்த நிகழ்வைப் பெரிதாக அப்பொழுது நினைக்கவில்லை
இப்பொழுது அதைவிடப் பெரிதாக ஒன்றும் நினைவுக்கு வரவில்லை, அம்மம்மா.
உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அன்பு பேரன்,
சுதன்